fbpx

இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கம்?… கடும் விவாதம்!… பிசிசிஐ நிர்வாகிகளிடையே சலசலப்பு!… விவரம் இதோ!

இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதால் பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் மீதுதான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான காரணம், கடந்த முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது தான்.அதிலும் வரிசையாக 3வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வருகிறது. அதன்படி, இந்த முறையும் டெல்லி, நாக்பூரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதையடுத்து, கோப்பையை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இந்தநிலையில், நாளை இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் நடக்க உள்ளது.

டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திவரும், எல் ராகுலை 3வது டெஸ்ட் தொடர் அணியில் சேர்ப்பது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் இடையே விவாதம் நடந்து உள்ளது. இந்த விவாதத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி கே எல் ராகுலுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சில நிர்வாகிகள் அவரை நீக்க கூடாது என்று கூறி உள்ளனர். கே எல் ராகுல் மட்டும் பார்மில் இல்லை. டாப் ஆர்டரில் பலர் பார்ம் இழந்து உள்ளனர். கோலி கூடத்தான் சரியாக ஆடவில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டீர்களா? ராகுலை நீக்க கூடாது. வேண்டுமென்றால் அவரின் பேட்டிங் பொஷிஷனை மாற்றுங்கள். அவரை ஓப்பனிங் இறக்குவதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் இறக்குங்கள், என்று சிலர் வாதம் வைக்கிறார்களாம்.

இன்னொரு பக்கம் கே எல் ராகுலுக்கு எதிராக சிலர் கடுமையாக கருத்து வைத்து உள்ளனர். அதில், கே . எல் ராகுல் மோசமான பார்மில் இருக்கிறார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ரன்கள். கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இவ்வளவு மோசமாக ஆடி இருக்கிறார்.அப்படி இருக்கும் போது அவரை எப்படி எடுக்கலாம். இதனால் அவருக்கு பதில் கில்லிற்கு இடம் கொடுங்கள் என்று சிலர் வாதம் வைத்து வருகிறார்களாம். இதனால் பிசிசிஐ மீட்டிங்கில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

மீண்டும் புதிய வைரஸ்...? அதிகரிக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு...! இவர்களுக்கு அதிகம் பரவுமாம்...!

Wed Mar 1 , 2023
மேற்கு வங்கத்தில் 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தது 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அடினோவைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் அச்சத்தைத் தூண்டுகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இந்த இறப்புகள் தொற்றுநோயால் ஏற்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளனர். அடினோவைரஸ் […]

You May Like