fbpx

நீங்க அப்போவே ஆக்ஷன் எடுத்திருந்தால், என் மகள் உயிரோட இருந்திருப்பா..!! – பெண் மருத்துவரின் தந்தை ஆதங்கம்!! 

கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்று கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துமனையில் உள்ள கருத்தரங்க கூட அரங்கில் ஆக.9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு உறவினர். அவர் வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்வதை தாமதப்படுத்தினார்.

இந்தக் கொலையை தற்கொலை என மாற்ற முடிவு செய்யதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட தந்தை கூறுகையில், ‘இந்தக் கொலையில் ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர்களோ அல்லது சாட்சிகளை அழிக்க முயற்சி செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் எனது குழந்தைகளைப் போன்றவர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாள் நாங்கள் வெற்றி பெற்ற நாளாக இருக்கும். கடந்த 2021ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போதே முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று என் மகள் உயிரோடு இருந்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Read more ; மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் படுமோசம்.. பாதிக்கு பாதி சரிந்தது..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..

English Summary

Kolkata doctor’s father criticises Mamata Banerjee’s inaction: ‘Daughter would have been alive if…’

Next Post

இந்தியன் ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.35,400..!! பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Wed Sep 18 , 2024
Indian Railways has released a notification to fill the vacant posts.

You May Like