’அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறுகிறார் கே.பி.முனுசாமி’..! கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி

அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி, திமுகவின் கைக்கூலியாக கே.பி.முனுசாமி செயல்படுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், முனுசாமி மகன் எம்.சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டு வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வழங்கியிருக்கிறார் அமைச்சர் காந்தி. பெட்ரோல் பங்க்கை கடந்த 25.5.22இல் அவரேவும் திறந்து வைத்துள்ளார்.

image
உண்மையில் அதிமுக ரகசியங்களை முனுசாமிதான் திமுகவுக்கு கூறி வருகிறார். திமுகவின் கைக்கூலியாக வேலை செய்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அதிமுகவில் உள்ள 7 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் நிரபராதி என நிரூபனம் ஆகும் வரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும், கட்சிப் பதவியை விட்டு விலக வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் லஞ்சம், குடும்ப அரசியலை எதிர்க்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இல்லம் முன்பு அப்பாவி தொண்டர்களை நிறுத்தி ஏன் கோஷம் போட வைக்க வேண்டும்? தனி நபர்களுக்காக கட்சித் தொண்டர்களை பயன்படுத்தக்கூடாது.” இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

ஒரே நேரத்தில் வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் அதிரடி சோதனை..!

Fri Jul 8 , 2022
ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் ஆடிட்டரின் நிறுவனமான மயிலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ. கன்சல்டென்சி அலுவலகத்திலும் […]
ஒரே நேரத்தில் வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் அதிரடி சோதனை..!

You May Like