தற்போது சினிமா துறையில் இருக்கும் பலரும் அந்த சினிமா துறையில் காலூன்றுவதற்கு மிகப்பெரிய சிரமங்களை தாண்டி வந்திருப்பார்கள். ஆனால் சினிமா துறையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு தன்னை கை தூக்கி விட்டவர்களை மறந்து செயல்படுவார்கள்.
இப்படிப்பட்ட இந்த காலத்தில், ரசிகர்களையும் மறக்காமல், அதோடு மட்டுமல்லாமல் தனக்கு வரும் வருமானத்தில் தனக்கு மட்டுமே சேர்த்து வைக்காமல், அதனை ஏழை, எளியவர்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும் செலவு செய்து வரும் ஒரு தங்கமான மனசுக்கு சொந்தக்காரர் தான் k.p.y பாலா.
இவர் விஜய் டிவியில் பல்வேறு பரிமாணங்களில் இருந்து தற்போது தவிர்க்க முடியாத பிரபலமாக மாறி இருக்கிறார். அதோடு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு அந்த நிகழ்ச்சியின் செட்டில் இவர் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அந்த நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர்சாதன பெட்டி ஒன்றைக் கூட ஆதரவற்றோர் இல்லத்திற்காக இலவசமாக வழங்கினார். அதன் பிறகு சமீபத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் ஒரு முதியோர் இல்லத்திற்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.
சரி ஊருக்கெல்லாம் ஓடி, ஓடி உதவி செய்த இவர், தன் அருகிலேயே இருக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? என்ற கேள்வியும் எழலாம். ஆனால் அந்த விஷயத்திலும் கூட அவரை எவராலும் குறை சொல்ல முடியாது.
ஆம் தன்னுடைய பெற்றோரான ஜெகநாதன் – பூங்குழலி தம்பதிகளுக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் மணி விழாவை தற்போது செய்து அவர் அழகு பார்த்திருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பாலா வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பாலாவின் பெற்றோருக்கு தெரிவித்து வருகிறார்கள்.