fbpx

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு..!! கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் திடீர் மரணம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உயிரிழந்தார்.

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கில் தலைமறைவாக இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். கைதான சிவராமனுக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More : ’உங்கள் பெயரை நீக்கிட்டாங்க’..!! ’உடனே செக் பண்ணிக்கோங்க’..!! 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Sivaraman, who was admitted to the Salem Government Hospital, succumbed to his injuries.

Chella

Next Post

நோட்..! இன்று காலை 11 மணி முதல் 'ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்'...!

Fri Aug 23 , 2024
'Pension Grievance Adjudication Camp' from 11 am today

You May Like