கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாறின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49) இவரை புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அதாவது சேர்ந்த ஜெயன் பிரபு என்பவர் சந்தித்து மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ரசல் ராஜ் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சிசெல்லதுரை திக்கணங்கோடு எபிரேம், தொழில்கோடு அருண்குமார் உள்ளிட்டோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் இவர்களிடமிருந்து 57 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு மத்திய அரசு வேலை உத்தரவை போல போலியான உத்தரவை தயார் செய்து எபிரேம் என்பவருக்கு கான்பூர் ரயில்வே துறையிலும், டெய்சி செல்லதுரை, அருண்குமார் உள்ளிட்டோருக்கு ஹைதராபாத் வருமானவரித்துறையிலும் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு சில இடங்கள் சென்ற பின்னர் அவர்களை மேடையில் இருந்து திருப்பி அனுப்பி விட்டதாக அவர் நாடகமாக இருக்கிறார் பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் அடைந்து விசாரணை செய்ததில் போலியான அரசு ஆணை தயார் செய்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 3 பேரும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கினர். அவருடைய உத்தரவின் அடிப்படையில், புதுக்கடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மத்திய அரசு வேலை உத்தரவை போலியாக தயார் செய்ததும், போலியான இடத்தில் வேலைக்கு அமர்த்தியதும் தெரிய வந்துள்ளது.
ஆகவே ஜெயன் பிரபு, அவருடைய சகோதரி ரதி மீனா (26), தாய் ரத்தினபாய், சென்னை சாய் பிரசாத் இன்ப உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயன் பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கின்ற மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.