அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்துக் கொண்ட நடிகை குஷ்பு, மாணவிக்கு நடந்த இந்த பாதிப்பு அவர் சாகும்வரை அவரால் மறக்க முடியாது என்று கூறினார். மேலும், தடையை மீறி பேரணி நடத்தியதால் நடிகை குஷ்பூவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, “என் சொந்த தந்தையே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் பெல்டின் பக்கிளை வைத்தும், ஷூவின் ஹீல்ஸை வைத்தும் அடித்திருக்கிறார். மேலும் அவர், எனது தாயை சுவற்றில் மோதவைத்திருக்கிறார். இதை வெளியே சொன்னால், அவர் எங்களை இன்னும் அதிகமாக துன்புறுத்துவார். இதனால் இந்த கொடுமைகளை பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. ஆனால் எனது 14 வயதில், படங்களில் எனக்கு முடி அலங்காரம் செய்தவர் என் தந்தையின் நடத்தையை கவனித்து என்னிடம் கேட்டார். முதல் முறையாக அவரிடம் தான் நான் எல்லாவற்றையும் கூறினேன், அதில் இருந்து தான் என் வாழ்க்கை மாறியது” என கூறியுள்ளார்.
Read more: ”வேலியே பயிரை மேயலாமா?” புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று, டிஎஸ்பி செய்த காரியம்..