நடிகை குஷ்பூ 90களில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அந்த காலகட்டத்தில் இவர் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சினிமா துறையில் பிரபலமாக வலம் வந்தவர்.
தற்சமயம் இவர் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதோடு அவர் சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகின்றார், நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், அரசியலில் இன்னொருபுறம் அவர் எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார்.

குஷ்பூ சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவா இருந்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்காக தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் குஷ்பூ.

தற்சமயம் அவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய ஒரு மகள் மட்டும் இடம்பெறவில்லை அவர் வேலையில் பிஸியாக இருப்பதால் வரவில்லை என்று குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.