fbpx

குவைத் தீ விபத்து!. கேரளாவைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!. உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் தூதரக அதிகாரிகள்!

Kuwait fire: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கேரளாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி பலியாகினர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பசேரி பகுதியைச் சேர்ந்த மேத்யூஸ் முலக்கல், 40. லினி ஆபிரகாம், 38, என்ற தம்பதிக்கு இரின், 14, என்ற மகளும், ஐசாக், 9, என்ற மகனும் இருந்தனர். இந்த தம்பதி, மேற்காசிய நாடான குவைத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு அப்பாஸிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சமீபத்தில் விடுமுறை காரணமாக, கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தன் குடும்பத்தினருடன் வந்தார். விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தபின், நேற்று முன்தினம் குவைத்திற்கு மீண்டும் சென்றனர். நேற்று, நான்கு பேரும் தங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் என, நான்கு பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்களது வீட்டு ‘ஏசி’ யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை கண்டறிந்தனர். இறந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை, அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Readmore: ஐபிஎல் 2025!. டு பிளெசிஸ் அவுட்!. கே.எல்.ராகுல் இன்!. பெங்களூரு அணியின் கேப்டனாக நியமனம்?.

English Summary

Kuwait fire! 4 people died including 2 children from Kerala! Consular officials are in the process of sending the body to their hometown!

Kokila

Next Post

கேரளா தனி நாடாக முயற்சியா...? முதல்வர் அறிவிப்பால் சர்ச்சை...!

Sun Jul 21 , 2024
Is Kerala trying to become a separate state...? Controversy over Chief Minister's announcement

You May Like