fbpx

“டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..” ₹.66,000/- சம்பளம்.! உடனடியாக அப்ளை பண்ணுங்க.!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கரூர் வைஸ்யா வங்கியில் பிரான்ச் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிகளுக்கான ஆள் சேர்ப்பு நடைபெறுவதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

பிரான்ச் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கான உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகும். மேலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்றும் பிடபுள்யூடி பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் வங்கிப் பணிகளில் 3 வருடம் முன் அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில புலமை பெற்றிருப்பது முன்னுரிமை அளிக்கும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.66,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 31.03.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய karurvysyabank.co.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

6 மீனவர்கள் கைது... மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Thu Jan 25 , 2024
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22-ல் கைது செய்துள்ளனர். இத்தகைய போக்கு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு […]

You May Like