Nocturnal erections: இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாத ஆண்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்பு 70 சதவீதம் அதிகம் என்று அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் பிரையன் ஜான்சன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மென் பொருள் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன். இவர் கடந்த 2023ம் ஆண்டு, தன் தந்தை ரிச்சர்டின் உடலுக்கு தன்னுடைய பிளாஸ்மாக்களை பரிமாற்றியதன் மூலம் (தந்தையின் பிளாஸ்மாக்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தன்னுடையதை ஏற்றினார்; பின் தான் வேறொருவரிடமிருந்து பிளாஸ்மாக்களை பெற்றுக்கொண்டார்) தந்தை ரிச்சர்டின் வயதாகும் வேகத்தை 25 வருடங்களுக்கு அவரால் குறைக்க முடிந்தது.
மேலும் இதற்காக தன் தந்தை தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும், எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி பகிர்ந்திருந்தார் அவர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் தற்போது மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது,இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாத ஆண்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்பு 70 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளார். இரவு நேர விறைப்புத்தன்மையை அனுபவிக்காத நபர்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார் . The Ranveer Show podcast-ல் பேசிய அவர், சராசரியாக, 20 வயது ஆணுக்கு ஒரு இரவில் 3 முதல் 5 விறைப்புத்தன்மை அத்தியாயங்கள் இருக்க வேண்டும், அதாவது சுமார் 145 நிமிடங்கள், அது ஆரோக்கியமாகும். 75 வயதுக்கு வரும் போது, இது சுமார் 50 நிமிடங்களுக்கு குறைகிறது, அதாவது வயதின் காரணமாக இது பெரிய அளவில் குறைகிறது. இரவு நேரத்தில் விறைப்புத்தன்மை என்பது மிகவும் முக்கியமான சுகாதாரக் குறிகாட்டியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாமைக்கும் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா? “இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாதது ( nocturnal ஆண்குறி டியூமசென்ஸ் அல்லது NPT என்றும் அழைக்கப்படுகிறது) சில உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது. பல ஆய்வுகள் விறைப்புத்தன்மை செயலிழப்பு – குறிப்பாக வாஸ்குலர் அல்லது வளர்சிதை மாற்ற பிரச்சனைகளால் ஏற்படும் போது – இருதய நோய் (CVD) மற்றும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புக்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. இரவு நேர விறைப்புத்தன்மை பெரும்பாலும் ஆரோக்கியமான வாஸ்குலர் செயல்பாடு மற்றும் நரம்பியல் பாதைகளால் இயக்கப்படுவதால், அவை இல்லாதது பெருந்தமனி தடிப்பு, நீரிழிவு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற நிலைமைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம், அவையே அதிகரித்த இறப்பு அபாயத்துடன் தொடர்புடையவை.”
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், erectile dysfunction (ED) பாதிப்பில் உள்ள ஆண்கள், இதய நோய் (CVD) மற்றும் அனைத்து காரணங்களின் மரணத்திற்கு அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று காட்டுகின்றன. மற்றொரு ஆய்வில், ED சில ஆண்டுகளுக்கு முன்னதாக இதய சம்பவங்களை முன்னறிவிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது ஒரு பயனுள்ள ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக அமைகிறது. இருப்பினும், இந்த ஆய்வுகள் EDக்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை ஆதரிக்கும் அதே வேளையில், பிரையன் ஜான்சன் கூறியது போல், இரவு நேர விறைப்புத்தன்மை இல்லாதது மட்டும் அகால மரண அபாயத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தால் அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.”
Readmore: மகிழ்ச்சி…! பட்டா பெறுவதற்கு 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!