fbpx

குருணை தட்டுப்பாடு; விலை உயர்வை கட்டுப்படுத்த… குருணை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..!

நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்க மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பாசுமதி அரிசியை தவிர மற்றும் புழுங்கல் அரிசி தவிர அரிசிகளின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறுகையில், உடைந்த அரிசி ஏற்றுமதியில் முற்றிலும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடைந்த தானியங்கள் கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என கூறினார். உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மேலும் இந்தியா உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

கர்ப்பிணி சென்ற ஆட்டோவை வழிமறித்து டிராபிக் போலீஸ் தகராறு ..அபராதம் கட்டியே ஆக வேண்டும் என தடாலடி ….

Sat Sep 10 , 2022
சென்னையில் கர்ப்பிணி ஒருவர் சென்ற ஆட்டோவை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் செலுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுனரிடம் தடாலடியாக பேசியது வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு12 மணி அளவில் ஆட்டோ ஒன்றை செம்பியம் போக்குவரத்து எஸ்.ஐ. பால முரளி என்பவர் வழிமறித்துள்ளார். ’’நோ , என்ட்ரியில் வந்ததற்காக ரூ.1500 எடு ’’ என போலீசார் ஓட்டுனரை கேட்டுள்ளார். நோ […]

You May Like