ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்யும் சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
இன்றைய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில், மாதவிடாய் பிரச்சனைகளால் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கு வராமல் போகலாம் அல்லது தள்ளி போகிறது. இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இதனை கண்டுக்கொள்ளாமல் விடுவதால், பின்னாளில் குழந்தை பேறு மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை ஏராளமான பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதனை ஆரம்பத்திலே போக்க ஒரு சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
3 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். பப்பாளியை அப்படியே உண்டால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோனைத் தூண்டு மாதவிடாயைத் தூண்டும். தினமும் இரண்டு வேளை பப்பாளி உண்ணுங்கள். இஞ்சுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் கருப்பை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். பின் இரத்த போக்கும் தடையின்றி வரும். தேவைப்பட்டால் டீயில் தேன் கலந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடிக்கத் துவங்குங்கள்.
வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். உதாரணமாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம். வெல்லம் , மஞ்சள், பேரிச்சை, மாதுளை, கேரட், பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ்சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.