பிரதமர் மோடி அரசின் லக்பதி திதி யோஜனா என்பது பெண்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கப்படும் திட்டமாகும். முற்றிலும் வட்டி இல்லாத இக்கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். அரசாங்கம் பெண்களிடையே பொருளாதார வலுவூட்டல் மற்றும் நிதி சுதந்திரத்தை உருவாக்கி நிறுவ முயற்சிக்கும் திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலனைப் பெற ஒரே ஒரு நிபந்தனை உள்ளது, அதாவது சுய உதவிக் குழுவில் (SHG) உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்தக் கடன் கிடைக்கும்.
கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 2 கோடியாக இருந்ததாக அரசு தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த எண்ணிக்கையை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்தார். பெண் அல்லது குடும்பத்தின் மொத்த வருவாயை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதற்கு லக்பதி திதி யோஜனா என்று பெயரிடப்பட்டது.
சுய உதவிக் குழுக்கள் என்றால் என்ன..?
முக்கியமாக கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைக் கொண்ட சிறு குழுக்கள், பணத்தைச் சேமிக்கவும், ஒருவருக்கொருவர் கடன் வழங்கவும் ஒன்று கூடுகின்றன. டிசம்பர் 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) தரவுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பெண் உறுப்பினர்களைக் கொண்ட 90 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருப்பதாக டவுன் டு எர்த் அறிக்கை கூறுகிறது. இது 1970களில் சில கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டது.
இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் இந்த முகவரியில் உள்நுழையலாம் – https://lakhpatididi.gov.in கோழி வளர்ப்பு, எல்இடி பல்பு உற்பத்தி, விவசாயம், காளான் வளர்ப்பு, ஸ்ட்ராபெர்ரி சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கைவினை வேலை, ஆடு வளர்ப்பு என அனைத்திற்கும் கடனைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Summer | பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!