fbpx

பெண்களே ஷாக் நியூஸ்.. இன்று ஒரே நாளில் ரூ.360 உயர்ந்த தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43,400-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

எனவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ465 உயர்ந்து ரூ.5,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.43,400க்கு விற்பனையாகிறது.. இதே பொல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி….! கோவில் திருவிழாவில் ஏற்பட்ட சோகம்….!

Thu Mar 16 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளான லாவண்யா(13) என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னால் ஏரி […]

You May Like