கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் சூர்யா என்றும் குஜராத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியும் வந்திருக்கிறது. தற்போது சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அந்த நபர். மூக்குப்பொடியில் ஏதேனும் ஒரு விஷம் மருந்தை தடவி ஆங்காங்கே தூங்கி விட்டு சென்றிருக்கிறார். இதனை உண்ட காக்கைகள் மயங்கி விழுந்து இறந்து இருக்கின்றன. சாலைகளிலும் தோட்டங்களிலுமிருந்து கிடக்கும் காக்கைகளை தனது சாக்கு பையில் வைத்து எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறார் அந்த நபர். மேலும் அவர் காவல்துறையின் விசாரணையில் வெண்ணிற படை நோயை குணப்படுத்தும் மருந்தை தயாரிப்பதற்காக காக்கைகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் உடன்பாடில்லை. இவர் இறந்த காக்கைகளை ஏதேனும் ஓட்டலில் கொடுத்து காசு பார்ப்பதற்காக தான் இவ்வாறு செய்திருக்கிறார் என மக்கள் சந்திக்கின்றனர். மேலும் அப்பகுதியில் காக்கா பிரியாணி எதுவும் தயார் செய்யப்படுகிறதா என்று பிரியாணி பிரியர்களுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.