fbpx

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிரடியாக உயருகிறது..!! ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு..!!

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம்.

2023 – 24 நிதியாண்டில் 4-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக, வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்….! காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராகும் திமுக தலைமை…!

Wed Feb 8 , 2023
திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆளும் தரப்பான திமுக வரும் 24ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினும், […]

You May Like