fbpx

Good News : வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதி…! முழு விவரம்

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறை, அதிக வருமான வரி திரும்பக்கோரும் (ரீபண்ட்) கோரிக்கைகளை ஆய்வு செய்யும் போது, சில வரி செலுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக வருமான வரிச்சட்டப் பிரிவு 80G-ன் படி (நிதிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் போன்றவை), பிரிவு 80E-ன் படி (கல்வி கடனுக்கான வட்டி) மற்றும் பிரிவு 80GGC பிரிவின் படி (அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள்) பெரும் வரி விலக்குகளை, தங்களது 2021-22, 2022-23 & 2023-24ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிப்படிவத்தில் கோரியுள்ளனர். வரி செலுத்துவோர் சிலர், தங்களது மொத்த வருவாயில் 80%க்கும் அதிகமான வருமானத்தை வரி விலக்காக கோரியுள்ளனர்.

அத்தகைய வரி செலுத்துவோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பலராலும் தங்களது வருமான வரிப்படிவத்தில் அவர்கள் கோரிய வரிக் சலுகைகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை வழங்க முடியவில்லை. இத்தகைய சூழலில், 1.4.2022 முதல் வருமான வரிச்சட்ட பிரிவு 139(8A)ன் கீழ் வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப்படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த பின்னரும், கூடுதல் வரியை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் கீழ், வரி செலுத்துவோர், அந்த வருடத்திற்கு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானம் அல்லது பிழைகளை சரி செய்ய முடியும். வருமான வரிப்படிவத்தைத் தாக்கல் செய்யும் போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதன் மூலம், அந்தப் பிழைகளை திருத்தும் செய்துக்கொள்ளலாம் என்பது அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது. மதிப்பீட்டு ஆண்டு 2021-22க்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி (அதாவது நிதி ஆண்டு 2020-21) 31.03.2024 ஆகும்.

Vignesh

Next Post

Medicine: 69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பு...! தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவு...!

Thu Mar 7 , 2024
நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் மருந்துகள் உட்பட 69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் சிடாகிளிப்டின் மற்றும் மெட்ஃபார்மின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை விலை ரூ.13.25 எனவும், உயர் ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் ஓல்மெசர்தன் மெடாக்சோமில் (20 Mg), அம்லோடைபைன் (5Mg) மற்றும் ஹைட்ரோகுளோரோதையாசைடு (12.5 Mg) மாத்திரை […]

You May Like