fbpx

நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம்!… 1 மணிநேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது!… அடுத்து எப்போது நிகழும்?

நடப்பாண்டி கடைசி சந்திர கிரகணம் அக்.28,29 தேதிகளில் நிகழ்கிறது. அந்தவகையில் இன்று அதிகாலை பகுதிநேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது.

முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். இந்த முழு நிலவின் மேல் பூமியின் நிழல் படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படும். அதேபோல் சந்திரனின் ஒரு பகுதியின்மேல் பூமியின் நிழல் விழுந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். அப்படியானால், பூமியைச் நிலவு சுற்றிவருவதால், ஒவ்வொரு மாதமும் ஏன் சந்திரகிரகணம் ஏற்படுவதில்லை என்ற கேள்வி எழலாம். நிலவு பூமியைச் சுற்றி வந்தாலும், எப்போதும் அது பூமியின் நிழலுக்குக்கீழ் வருவதில்லை. பூமியைச் சுற்றிய நிலவின் வட்டப்பாதை, சற்றுச் சாய்வானது. அதனால் நிலவு பூமிக்குப் பின் இருந்தாலும் அதன்மீது பூமியின் நிழல் படாமல் போகலாம். இதனால் சந்திர கிரகணம் அரிதாகவே நிகழ்கிறது.

அந்த வகையில் கடந்த 14-ந்தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. பொதுவாக சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் 29-ந்தேதி(இன்று) பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது.

இந்த கிரகணம் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸாம், பெங்களூர், மும்பை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, பாட்னா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்பட்டது. இந்தியாவைத் தவிர ஆசியாவின் பிற பகுதிகள், ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணம் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும். இதற்கு முன்பு கடந்த மே 5-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சந்திர கிரகணம் எப்போது? இந்தியாவில் இதற்கடுத்த சந்திர கிரகணம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியாவிலிருந்து தெரியும், அது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்குமுன் இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நடந்த முழு சந்திர கிரகணம் தென்பட்டது. அதுதான் கடைசியாக இந்தியாவில் தென்பட்ட சந்திர கிரகணம்.

Kokila

Next Post

தலை சுற்றவைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்!… தீபாவளி செலவுகளை கணக்கிட்டு டென்ஷன் ஆகும் நெட்டிசன்கள்!

Sun Oct 29 , 2023
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சென்னை போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருந்ததாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனை குறைக்கும் வகையில் கட்டணம் தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் […]

You May Like