fbpx

கோயிலில் திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தால் கடவுளை வழிபடலாமா.!

பொதுவாக நம்மில் பலரும் கோயிலுக்கு அடிக்கடி சென்று கடவுளை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து வருவோம். அவ்வாறு கோயிலுக்கு செல்லும்போது ஒரு சில நேரங்களில் அபிஷேக நேரம் எதுவென்று தெரியாமல் சென்றிருப்போம். அபிஷேக நேரம் என்பது விசேஷ நாட்களில் ஒவ்வொரு கோயிலிலும் மாறுபடும். இவ்வாறு ஒரு சில நேரத்தில் கோயிலுக்கு செல்லும்போது சன்னதியில் சாமி சிலைக்கு திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு மறைக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் ஒரு சிலர் திரையைப் பார்த்து கடவுளை வணங்கி விட்டு பிரார்த்தனை செய்வார்கள். அப்படி செய்யலாமா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். இது குறித்து தெளிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்வாறு நேரம் காலம் தெரியாமல் கோயிலுக்கு செல்லும்போது சாமி சிலைக்கு திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் காத்திருந்து கடவுளை வணங்கி விட்டு செல்வதுதான் நல்லது. அவசர அவசரமாக கோவிலுக்கு சென்று விட்டு கடவுளை வணங்காமல் திரும்புவது பல கேடுகளை ஏற்படுத்தும். துரதிஷ்டம் வந்து சேரும்.

இவ்வாறு திரையிடப்பட்டிருக்கும் நேரத்தில் கோயிலுக்கு சென்று விட்டு அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு கோயிலின் கோபுரத்திலும் விமான கலசம் இருக்கும். இந்த கலசத்தை பார்த்து மனதார வேண்டி அடுத்த முறை கடவுளை வந்து பார்க்கும் வரம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு செல்வது மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும் தான். எனவே எப்போதும் கோயிலுக்கு சென்று விட்டு அவசரமாக வெளியே செல்ல கூடாது. இது கோயிலுக்கு சென்ற பலனை தராது.

Rupa

Next Post

பயங்கர காட்டுத்தீ!… 46 பேர் பலி!… கரும்புகையால் சூழ்ந்த சிலி!… விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

Sun Feb 4 , 2024
சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரத்தும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்தன. பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி 46 […]

You May Like