fbpx

நோய் நொடிகளை தீர்த்து நலம் தரும் தன்வந்திரி கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். வாழ்வில் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் நோயில்லாத வாழ்வே பெரும் செல்வமாக கருதப்படுகிறது. இந்த நோய் நொடி இல்லாத வாழ்விற்கு தன்வந்திரி பகவானை வழிபட்டு தன்வந்திரி மந்திரம் சொல்லி வர வாழ்வில் நலம் பெருகும்.

தன்வந்திரி பகவான் என்பவர் ஆயுர்வேத மருத்துவர்களின் கடவுள் என்றும், தேவர்களின் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு பல்வேறு நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவானுக்கு கோயில்கள் மிகவும் குறைவு ஆனால் பண்ருட்டியில் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆலயம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்பாக பெருமாளின் தீவிர பக்தர் ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்தர் பெருமாளை தரிசிக்க முடியாமல் மிகவும் வருத்தம் அடைந்தார். பின்பு அவர் இருந்த இடத்திலேயே தன்வந்திரி பகவானை வேண்டி “என்னை நோய் நொடியில் இருந்து மீட்டெடுப்பாய் என் பகவானே” என்று கேட்டுள்ளார். இதன் பலனாகவே விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விட்டாராம். இதனாலையே அந்த இடத்தில் தன்வந்திரி பகவான் கோயில் அமைக்கப்பட்டது என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் எந்த கோயிலிலும் இல்லாத அளவிற்கு தன்வந்திரி பகவான் ஆலயத்தில் அர்த்த ஜாமத்தில் பூஜை நடைபெறும். அந்த பூஜையில் நாட்டு வைத்தியரை கொண்டு தயாரிக்கப்பட்ட அமிர்த கசாயத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் வாழலாம் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Baskar

Next Post

இனி உங்கள் அக்கவுண்டிற்கு ரூ.8,000 வரப்போகுது..!! பட்ஜெட்டில் வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு..!!

Thu Feb 1 , 2024
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழல், மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பொதுவாக, வருமான வரி சலுகை, ரெப்கோ வட்டி விகிதம், தொழில் வளர்ச்சி, இளைஞர் திறன் மேம்பாடு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்றவைக்காக பட்ஜெட்டில் […]

You May Like