பொதுவாக நம் முன்னோர் காலத்தில் எந்த நோய்கள் ஏற்பட்டாலும் உடனடியாக விபூதியை பூசுவதால் நோய் நொடி விட்டு விலகும் என்று நம்பப்பட்டு வந்தது. அந்த வகையில் முருகனின் அறுவடை வீடான திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபூதியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
இந்த பன்னீர் இலை விபூதியை பூசி கொள்வதால் நோய் நொடிகள் தீரும் என்று நம்பப்பட்டு வருகிறது. மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள பன்னீர் மரங்களில் முருகனை வழிபட்ட தேவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனாலேயே பன்னீர் இலைகள் சிறப்பு வாய்ந்ததாக இக்கோயிலில் கருதப்பட்டு வருகிறது.
பன்னிரு நரம்புகளைக் கொண்ட பன்னீர் இலைகள் முருகனின் பன்னிரு கரங்களுக்கு இணையாக கருதப்படுகிறது. இதனாலையே பன்னீர் இலையில் விபூதி வழங்கப்படும் போது முருகன் தனது கையாலேயே பக்தர்களுக்கு விபூதி வழங்குகிறார் என்று நம்பிக்கை இருந்து வருகிறது. குறிப்பாக சுவாமி ஆதிசங்கரர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட போது திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி தான் நோயை குணப்படுத்தியது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வேத மந்திர சக்தி நிறைந்துள்ள பன்னீர் இலை விபூதியை திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்து வந்தால் துன்பங்கள் நேர்ந்தாலும் நோய் நொடி ஏற்பட்டாலும் இந்த பன்னீர் இலை விபூதியை பூசும்போது பிரச்சனைகள் விலகி ஓடும் என்பது இக்கோயிலின் சிறப்பு வாய்ந்த விஷயமாக கருதப்பட்டு வருகிறது.