தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி கோவை பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் பெட்ரோல் குண்டானது வீசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், பெட்ரோல் குண்டு எறிவது, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவதுப் பற்றியும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.