இந்தியாவில் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ல் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. சட்டத் தொழிலை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தத் துறையில் சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழக்கறிஞர்கள் சட்டம், 1961 ஐ திருத்த சட்ட விவகாரங்கள் துறை முன்மொழிந்துள்ளது. சட்டத் தொழிலையும் சட்டக் கல்வியையும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும்எனபதே இந்தத் திருத்தத்துக்கான நோக்கமாகும். சட்டக் கல்வியை மேம்படுத்துதல், வேகமாக மாறிவரும் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழக்கறிஞர்களை தயார்படுத்துதல் மற்றும் தொழில்முறை தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் இந்த சீர்திருத்தங்கள் கவனம் செலுத்தும்.
சமத்துவமான சமூகத்தையும், வளர்ந்த தேசத்தையும் உருவாக்குவதற்கு சட்டத்தொழில் பங்களிப்பதை உறுதி செய்வதே இதன் இலக்காகும். இந்த வரைவு மசோதா குறித்த கருத்துகளை பொதுமக்கள் dhruvakumar.1973[at]gov[dot]in மற்றும் impcell-dla[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 28.02.2025-ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.