பிரபல வழக்கறிஞர்களால் விதிக்கப்படும் அதிகப்படியான சட்டக் கட்டணங்கள் குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் 18வது அகில இந்திய சட்ட சேவைகள் அதிகாரிகளின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “வளமான மக்கள் பெரிய வழக்கறிஞர்களை வாங்க முடியும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் உள்ளனர், அவர்களின் கட்டணத்தை சாமானியரால் செலுத்த முடியாது. ஒரு விசாரணைக்கு 10-15 லட்சம் ரூபாய் வசூலித்தால், ஒரு சாமானியர் எப்படி பணம் செலுத்த முடியும்..” என்று கேள்வி எழுப்பினார்..
இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவின் மனுவை விசாரிக்கும் போது தங்கள் கருத்தை தெரிவித்ததற்காக இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம்,” என்று அவர் கூறினார்.
மேலும் குதிரை பேரம் மூலம் அரசாங்கங்கள் மாற்றப்படுகின்றன என்று கூறிய அசோக் கெலாட் நாட்டில் நிலவும் நிலைமை மிகவும் ஆபத்தானது என்றும், தனது அரசு எப்படி நீடித்தது என்பது ஆச்சரியமான விஷயம்,” என்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்..