fbpx

”என்னை விட்ருங்க”..!! 10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த 7 பேர்..? ஸ்கெட்ச் போட்ட முன்னாள் காதலன்..?

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், வேலை காரணமாக குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் உதகையில் வசித்து வருகின்றனர். தம்பதியின் மகள் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவிக்கு மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்க்கும் யுவராஜ் என்ற ஹரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலர்களிடையே பிரச்சனை ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து மாணவி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி மாணவியின் உறவினர் வீட்டு விசேஷம் சம்பந்தமாக மாணவியின் தந்தை சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். மாணவியின் தாய் வேலைக்கு சென்று விட்டார். இதனால் தன்னுடைய தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு மாணவியும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால், தேனாடுகம்பை காவல்நிலையத்தில் மாணவியின் தாய் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், முகநூல் மூலம் அறிமுகமான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவர், அவரது வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றதும், அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது, கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே காதலித்து வந்த ஹரிஸ் (21) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர் மட்டுமின்றி, சிறுமியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி பலரும் சிறுமியிடம் பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் காதலன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா, ஊட்டியை சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டியை சேர்ந்த பிரவீன் (19), பெந்தட்டியை சேர்ந்த பிரேம்குமார் (24) உள்பட 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : கள்ளக்காதலுக்காக இப்படி இறங்கிட்டாங்களே..!! நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!! கம்பி எண்ணும் காதலியின் பின்னணி..!!

English Summary

Three people, including the ex-boyfriend, have been arrested in the rape case of a tenth grade student.

Chella

Next Post

இந்த நாட்களில் கணவன் - மனைவி உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.. ஏன் தெரியுமா?

Fri Nov 22 , 2024
திருமண உறவில் தாம்பத்யம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எத்தனை நாட்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர் தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து மாறும்படும். எனினும் குறிப்பிட்ட சில நாட்களில் கணவன் – மனைவி இடையே தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அவை எந்தெந்த நாட்கள் தெரியுமா? ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று கணவன் மனைவி உடலுறவு கொள்ளக்கூடாது என்றும் ஒருவருக்கொருவர் […]

You May Like