fbpx

பால் குடிக்கிற குழந்தையை விட்டுட்டு!… வேலைக்கு போறீங்களா?… தாய்ப்பாலை சேமிக்க டிப்ஸ் இதோ!

வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து எடுக்கும்.

சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். அதேசமயம் தூக்கமும் இருக்கும், பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள் குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். இந்த சமயம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய்மார்கள் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்களோ அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்களோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும்.

இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பிரெஸ்ட் பம்பு பயன்படுத்தி சேமித்து வைக்கவேண்டும். நீங்கள் தொடர்ந்து குழந்தைகளுக்கு எப்படி தாய்ப்பால் கொடுத்து வருகிறார்களோ அதேபோல் பிரெஸ்ட் பம்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். இப்படி எடுக்கும் பாலை பிரிட்ஜில் 24 மணி முதல் 48 மணி நேரம் வைத்திருக்கலாம். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அதேசமயம் பாத்திரத்தில் ஊற்றி காய வைத்தும் கொடுக்கக்கூடாது.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சூடானதும் அந்த பால் இருக்கும் பாத்திரத்தை அதில் வைத்து மிதமாக சூடுபடுத்தி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதே சமயம் சூடாகி விட்டதா என்று கை வைத்தும் பார்க்கக்கூடாது. பாலை ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையை விட்டபிறகு குழந்தைகளுக்கு சூடுபடுத்தி கொடுத்தல் வேண்டும்.

Kokila

Next Post

பல மாதங்களாக ஒரே டூத் பிரஷ் பயன்படுத்துகிறீர்களா?... கண்ணுக்கு தெரியாத ஆபத்து!... பின்விளைவுகள் அதிகம்!

Wed Apr 26 , 2023
தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த […]

You May Like