fbpx

’போட்டியை விடுங்க.. இந்த சண்டையை கவனிச்சீங்களா’..? அடிதடியில் இறங்கிய ரசிகர்கள்..!! ஆடிப்போன மைதானம்..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பேட்டிங் தோ்வு செய்தது. அதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான், பொறுப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் ஆப்கானிஸ்தான் பவுலா்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனா். ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சில இந்திய அணி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சண்டையிட்டனர். முதலில் சிலருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே கைகலப்பாக மாறி, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு!… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Thu Oct 12 , 2023
நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.  மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. […]

You May Like