fbpx

பழம்பெரும் பாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

குஜராத்தி நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சமீர் காக்கர்.. 80களில் டிடியில் ஒளிபரப்பான நக்கட் என்ற நிகழ்ச்சி மூலம் அவர் பிரபலமான குணச்சித்திர நடிகராக மாறினார்.. சர்க்கஸ், நயா நுக்கட், ஸ்ரீமான் ஸ்ரீமதி, மணிரஞ்சன் மற்றும் அதாலாத் உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீர் நடித்துள்ளார்… மேலும் ஹசீ டு ஃபேஸி, படேல் கோ பஞ்சாபி ஷாதி, புஷ்பக், பரிந்தா மற்றும் ஷாஹேன்ஷா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக மேடை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சமீர் நடித்து வந்தார்..

இந்நிலையில் நடிகர் சமீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. நேற்று காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்ட நிலையில், மருத்துவரை வீட்டிற்கு அழைத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.. சமீரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து உடனடியாக சமீர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. அவருக்கு ஐசியூவில் சிகிச்சை வழங்கப்பட்டது..

எனினும் அவரின் உறுப்புகள் செயலிழந்ததால் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.. சமீரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சமீபத்தில், சமீர் அமேசான் பிரைம் வீடியோவின் ஃபார்ஸி, ஜீ 5 இன் சன் பிளவர் சுதிர் மிஷ்ராவின் சீரியஸ் மென் ஆகிய வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

ஒரே ஒரு லிங்கை கிளிக் செய்ததால் ரூ.15 லட்சத்தை இழந்த நபர்.. என்ன நடந்தது..?

Wed Mar 15 , 2023
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன், இணைய மோசடிகளும் சேர்ந்தே அதிகரித்துள்ளன. மோசடி என்றால் யாராவது உங்களை நேரில் வந்து தான் ஏமாற்ற வேண்டும் என்று நிலை மாறி, தற்போது சைபர் குற்றவாளிகள் ஆன்லைனிலேயே லட்சக்கணக்கில் பணத்தை திருடுகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்கள், எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன. […]

You May Like