பழம்பெரும் மலையாள நடிகர் நெடும்பரம் கோபி உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 85.
கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியரான கோபி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ப்ளெஸ்ஸி இயக்கிய Kazhcha என்ற படத்தின் மூலன் கேரள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.. இதில் நெடும்பரம் கோபி, மம்முட்டி தந்தை மற்றும் தாத்தாவாக அவரது மனதை தொடும் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
பின்னர் அவர் ஜெயராஜ் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.. மேலும், சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற நடிகர்களுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.. அவர் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்க பாத்திரங்களாக பேசப்பட்டன. சீலாபதி, அஸ்வரூதன், ஆனந்தபைரவி, அலிஃப் மற்றும் அனசந்தம் என பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நோய்களால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துவிட்டார்.. அவரின் மறைவு கேரள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. பல்வேறு பிரபலங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..