fbpx

பழம்பெரும் பின்னணி பாடகர் உடல்நலக்குறைவால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..

பழம்பெரும் பின்னணி பாடகர் பூபிந்தர் சிங் நேற்று மாலை மாலை மும்பையில் காலமானார்..

பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கோவிட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக திங்களன்று மூத்த பின்னணி பாடகர் பூபிந்தர் சிங்கை இசைத்துறை இழந்துள்ளது. அவருக்கு வயது 82. அவரது 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், பூபிந்தர் இசைத்துறையின் மிகப்பெரிய ஜாம்பாவன்களான முகமது ரஃபி, ஆர்.டி.பர்மன், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் பப்பி லஹிரி போன்றவர்களுடன் பணியாற்றினார்..

மௌசம், சட்டே பே சத்தா, அஹிஸ்தா அஹிஸ்தா, தூரியன், ஹக்கீகத் உள்ளிட்ட பல படங்களில் அவரது மறக்கமுடியாத பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்..அவரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

பூபிந்தர் சிங், 1940, பிப்ரவரி 6 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் பாடகரும் அவரது ஆரம்பகால இசை ஆசிரியருமான பேராசிரியர் நாதா சிங்ஜிக்கு பிறந்தார். அவரது தந்தை ஒரு கண்டிப்பான ஆசிரியர், பூபிந்தர் ஒரு கட்டத்தில் இசையையும், இசை கருவிகளையும் வெறுத்தார். 1980களில், பூபிந்தர் வங்காளதேச பாடகி மிதாலி முகர்ஜியை மணந்து பின்னணி பாடுவதில் இருந்து விலகிவிட்டார். இவர்களுக்கு நிஹால் சிங் என்ற ஒரு மகன் உள்ளார்..

Maha

Next Post

"சூப்பர் நியூஸ்" இனி இவர்களுக்கு மட்டும் தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

Tue Jul 19 , 2022
தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌; தமிழ்நாட்டில்‌ உள்ள 2.37 கோடி வீடு மற்றும்‌ குடிசை மின்‌ நுகர்வோரில்‌, ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42:19 சதவீதம்‌) மின்‌ கட்டண உயர்வு எதுவும்‌ இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌. வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல்‌ வாக்குறுதி எண்‌.222-ன்‌ படி நிலைக்கட்டணம்‌ இருமாதங்களுக்கு ரூ.20 முதல்‌ ரூ.50 […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like