fbpx

“சூப்பர் நியூஸ்” இனி இவர்களுக்கு மட்டும் தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌; தமிழ்நாட்டில்‌ உள்ள 2.37 கோடி வீடு மற்றும்‌ குடிசை மின்‌ நுகர்வோரில்‌, ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42:19 சதவீதம்‌) மின்‌ கட்டண உயர்வு எதுவும்‌ இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌. வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல்‌ வாக்குறுதி எண்‌.222-ன்‌ படி நிலைக்கட்டணம்‌ இருமாதங்களுக்கு ரூ.20 முதல்‌ ரூ.50 வரை செலுத்துவதில்‌ இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால்‌ 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள்‌ பயன்‌ அடைவர்‌.

மின்சாரக் கட்டணம் அதிகமா இருக்கேன்னு கவலையா..? இனியும் இந்த தப்ப செய்யாதீங்க..!

தற்பொழுது குடிசை, விவசாயம்‌, கைத்தறி, விசைத்தநி மற்றும்‌ வழிப்பாட்டுதலங்கள்‌ முதலிய மின்‌ கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும்‌ மின்சார மானியம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. ஒரு மாதங்களுக்கு மொத்தம்‌ 200 யூனிட்‌ வரை பயன்படுத்தும்‌ 63.35 இலட்சம்‌ வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 300 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 36.25 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 400 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 18.52 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 500 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 10.56 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.297.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 600 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 3.14 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 700 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 1.96 இலட்சம்‌ வீட்டுமின்‌ நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.275 மட்டும்‌ உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 800 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 1.26 இலட்சம்‌ வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 900 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 0.84 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (0.35. சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.565 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

Also Read: இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்…! மொத்தம் 18 அமர்வு… 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்…!

Vignesh

Next Post

இந்த 12 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க... இன்றும், நாளையும் கனமழை பெய்யும்..

Tue Jul 19 , 2022
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, […]
rain

You May Like