பொதுவாகவே நாம் சளி பிடித்துவிட்டால், உடனே ஒரு சில பொருள்கள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவோம். குறிப்பாக தயிர், லெமன் போன்ற உணவுகளை நாம் தொடவே மாட்டோம். ஆனால் உண்மையில், எலுமிச்சை சாறு சளியை குணப்படுத்துமாம். ஆம், உண்மை தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை சாற்றை அதாவது கடைகளில் பாட்டிலில் இருக்கும் ஜூஸ் குடிக்க கூடாது.
அதற்கு பதில், நல்ல எலுமிச்சை பழத்தை வாங்கி, அதை நாம் வீடுகளிலேயே சாறு எடுத்து குடிக்கலாம். இப்படி எலுமிச்சை சாறு குடிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், இந்த எலுமிச்சை சாறு அந்த கற்களை கரைக்க பெரிதும் உதவும். மேலும், இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், ஸ்கர்வி போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கும்.
எலுமிச்சையில் ஆண்டிஹிஸ்டமைன் உள்ளதால், அது தோல் சம்பந்தப்ட்ட பிரச்சனைகள் குணமாகும். அதோடு, கால் விரல் வீக்கம், வலி ஆகியவற்றை சரி செய்யும். எலுமிச்சை சாறை நாம் உணவுக்கு முன் குடிப்பது நல்லது. அதே போல், எலுமிச்சை சாறில் கட்டாயம் தண்ணீர் சேர்த்து தான் குடிக்க வேண்டும். வயிற்றில் புண் அல்லது வீக்கம் இருந்தால் எலுமிச்சை சாறு குடிக்க வேண்டாம்.
வாந்தி, கை, கால் நடுக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எலுமிச்சை சாறு குடிக்க கூடாது. சளி இருக்கும் போது எலுமிச்சை சாறு குடிப்பதால், விரைவில் குணமாகும். இதனால் நீங்கள் பயம் இல்லாமல், சளி இருக்கும் போது எலுமிச்சை சாறு குடிக்கலாம். மருந்தாக நீங்கள் எலுமிச்சை சாறு குடிக்கும் போது சர்க்கரை சேர்க்கக்கூடாது. உங்களுக்கு வேண்டுமானால் சிறிது தேன் சேர்க்கலாம்.