fbpx

’7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம்’..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

கேரளாவில் கடந்த 2023ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம், “பள்ளி மாணவ-மாணவியர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு காரணம் போக் சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததே” என கூறியிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து எஸ்.சி.இ.ஆர்.டி எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

அதன்படி, கேரளாவில் பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான பாடப்புத்தகங்களை திறமையான நிபுணர்களை வைத்து உருவாக்கும் பணி விரைவில் துவங்கும் எனவும் 2024-25 கல்வியாண்டு முதல் போக்சோ விழிப்புணர்வு பாடங்கள் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போக்சோ சட்டம் பற்றிய பாடம் வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் கற்பிக்கப்படும். இது அடுத்தாண்டு முதல் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும். மேலும், 5 முதல் 10ஆம் வகுப்பு வரை தொழிற்கல்வி பயிலும் வகையிலும் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்படும்” என்றார்.

Chella

Next Post

தாஜ்மஹாலில் பயன்படுத்தப்பட்ட கல் எது?… எங்கு கிடைக்கும்?… வீட்டிற்கு பயன்படுத்தினால் எவ்வளவு செலவாகும்?

Thu Jan 18 , 2024
அன்பின் சின்னமான தாஜ்மஹால் அதன் வெள்ளை கற்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால், எந்தக் கல் அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது தெரியுமா? இன்று இந்தக் கல்லைப் பற்றியும், இந்த கல்லை வீட்டில் நிறுவ விரும்பினால், அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தாஜ்மஹாலில் பயன்படுத்தப்படும் வெள்ளைக் கல் மக்ரானா மார்பிள் என்று அழைக்கப்படுகிறது. மக்ரானா மார்பிள் தாஜ்மஹாலில் மட்டும் […]

You May Like