இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி.
இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் உடனே தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் செல்லட்டும் என காத்திருந்தார்.
ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது. பிரதமர் மோடியின் இத்தகைய செயல் சாலை விதிகளை கடை பிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது பெருமையை சேர்த்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பியில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்திய பிரதமர் மோடி வீடியோ வைரலாகி வருகிறது.