fbpx

கண் சிமிட்டாமல் கணினி பயன்படுத்துபவரா நீங்கள்?..பக்கவாதம் ஏற்படும் அபாயம்..!

கண் சிமிட்டலினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

நம்முடைய மனித உறுப்புகளில் கண் சிறப்பம்சமானது.இதன் மூலம் நாம் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. கண் சிமிட்டலில் நாம் அறியாத பல நன்மைகள் உள்ளது. பொதுவாக கண்களுக்கு ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜன் வழங்குவதற்காக தான் நாம் கண்களை சிமிட்டுகிறோம்.இந்த செயற்பாடு சரியாக நடக்காவிட்டல் நம்மாள் பார்க்க முடியாது.

நம்முடைய இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் தான் சிமிட்டும். ஏனென்றால் நரம்பானது இரண்டு கண்களுக்கும் ஒன்றி உள்ளது. அந்நரம்பு கண்களில் இருந்து செய்திகளை மூளைக்கு அனுப்பும் வேளையில் இரண்டு கண்ணும் சிமிட்டப்படும். இந்த கண் சிமிட்டலானது எரிச்சலூட்டக்கூடிய அல்லது உறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் இருந்து நம் கண்களை பாதுகாக்க உதவுகிறது.

கணினி மற்றும் கைப்பேசி போன்றவற்றை நீண்ட நேரம் நாம் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவதை பெரிதும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் கண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.இதன் விளைவாக பக்கவாதம்ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க அடிக்கடி இடைவெளி எடுக்கவேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு, 20 அடிகளுக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்ப்பதனால் 20-20-20 விதியானதை பின்பற்றி பாதிப்பில் இருந்து விடுபெற முடியம்.

கணினி பயன்படுத்தும்போது உங்கள் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் இருக்க brightness மற்றும் contrast யை சரிசெய்து பயன்படுத்த வேண்டும்.தூங்க செல்வதற்குமுன் கணினி முன் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்வது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்க உதவும்.கண்களை அடிக்கடி சிமிட்டுவதின் மூலம் கண் சம்மந்தமான நோய்களிடமிருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Maha

Next Post

2024 ஜனவரி மாதத்திற்குள் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!! விலையும் இவ்வளவு கம்மியா..?

Tue Jan 2 , 2024
2024ஆம் ஆண்டின் முதல் மாதமே களைகட்டுகிறது. ஏனென்றால், ஜனவரி 4 முதல் ஜனவரி 23ஆம் தேதிக்குள் மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. என்னென்ன மாடல்கள் எந்த தேதியில் என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series): ஜனவரி 4 ஆம் தேதி அன்று அதன் ரெட்மி நோட் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை […]

You May Like