இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் வழங்கும் வழக்கமான கடன்களில் அதிக வட்டி விகிதங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு கிடைக்கும்.
அதாவது, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் 2 முதல் 4 சதவீதம் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும். கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொருத்து கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை விவசாயிகள் நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி : இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விவசாய உரிமையாளர், பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்பு குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் : இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கண்டிப்பாக தேவை. அவை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்று, நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், வங்கி கேட்கும் மற்ற ஆவணங்கள் போன்றவை இருந்தால்தான், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
கார்டு எப்படி பெறுவது? நீங்கள் இந்த திட்டத்தின் கார்டுகளை, நபார்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, “KCC க்கு விண்ணப்பிக்கவும்” என்ற ஆப்ஷனை கிளக் செய்து, KCC படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் – பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பித்தால், வங்கியின் கடன் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்வார். உங்கள் படிவம் சரிபார்க்கப்பட்ட பின்னர், விரைவில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
Read more ; விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு.. டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு..!!