முட்டை உடலுக்கு நல்லது தான் என்றாலும் கெட்டுப் போன முட்டையை சாப்பிட்டால் அது விஷமானதாக மாறும்.. கெட்ட போன முட்டையைச் சரியாக அடையாளம் கண்டு கொள்வது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் முட்டை எப்படிக் கெட்டுப் போகிறது.. உள்ளே என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். முட்டை உள்ளே இருக்கும் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் சிதைவதாலேயே முட்டை கெட்டுப் போகிறது. இதற்கு உள்ளே நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணமாகும். அதாவது முட்டைக்குள் கார்போனிக் ஆசிட் என்பது இருக்கும். அது நாட்கள் செல்ல செல்ல கார்பன்டை ஆக்ஸைடாக மாறும். இது முட்டைக்குள் ஏர் பாக்கெட்களை உருவாக்கும்.
இப்படி முட்டை சிதைவதால் முட்டை alkalineஆக அதாவது காரத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதுபோன்ற நேரங்களில் முட்டைக்குள் இருக்கும் சல்பர், ஹைட்ரஜன் உடன் செயல்புரியத் தொடங்கும். இதனால் ஹைடரஜன் சல்பைட் உருவாகும். அழுகிய முட்டை நாற்றம் இதுதான் காரணம். இது ரொம்பவே ஆபத்தான ஒரு வாயுவாகும். சுவாசித்தாலே பிரச்சினையைத் தரும். முட்டையை உடைத்தவுடன் வரும் இந்த அழுகிய முட்டை வாசத்தை வைத்தும் கூட அது கெட்டுப்போன முட்டை என்பதை ஈஸியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்,
அதேபோல முட்டை ஓட்டை வைத்தே கூட வாங்கும் முன்பே நீங்கள் சிலவற்றைத் தவிர்க்கலாம். முதலில் முட்டையில் எந்தவொரு விரிசலும் இருக்கக்கூடாது. விரில் இருந்தால் அதன் வழியாக நோய்க்கிருமிகள் உள்ளே புகுந்து, முட்டை கெட்டுப் போக வைத்து இருக்கும். அதேபோல முட்டையின் ஓடு மெலிதானதாக இருந்தால் அதுவும் ஒரு அறிகுறி. முட்டை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும் நீங்கள் முட்டையைக் குலுக்கி பார்த்தும் கூட அது கெட்டுப் போய் விட்டதா இல்லையா என்பதைக் கண்டறியலாம், காதுக்கு அருகே வைத்துக் குலுக்கி பாருங்கள். அதில் இருந்து சத்தம் வரவில்லை என்றால் நல்ல முட்டை.. அதேநேரம் சத்தம் வந்தால் கெட்டுப் போய் இருக்க வாய்ப்பு அதிகம். இந்த டிப்ஸ்களை பாலோ செய்து கெட்டுப் போன முட்டையை கண்டறிந்து அதை வாங்குவதை தவிர்க்கலாம்.
Read more ; ஷாக் நியூஸ்…! அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்தும் சென்னை மாநகராட்சி…!