fbpx

’இது மாதிரி பண்ணலாம்’..!! மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி செக்ஸ் ஆசையை தூண்டிய ஆசிரியர்..!!

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் டாங்கோர்லி பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் 52 வயது ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவிகள் 8 பேருக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், கண்ட கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த விசாரணையை தொடர்ந்து ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chella

Next Post

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு இரு குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை……! நாமக்கல் அருகே சோகம்…….!

Tue Mar 14 , 2023
நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குணவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வீட்டருகே இருக்கின்ற கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like