fbpx

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு லைசென்ஸ்..!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா அரசானது பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமல்படுத்த உள்ளது. அதாவது, சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை மாணவர்களுக்கு பள்ளியிலேயே பயிற்றுவித்து, அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து சேர்க்கப்பட உள்ளது.

அதனை படித்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பழகுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் அதன் பின் 18 வயது நிரம்பியவர்கள் பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பொது கல்வித்துறை அமைச்சகத்திற்கும், முதல்வருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

குடும்ப வறுமைக்காக வெளிநாட்டிற்கு சென்ற கணவர் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் கஞ்சா போதையில் வந்து ஆடையை அகற்றி சிலுமிஷம் செய்த வாலிபர்…..! நடவடிக்கை மேற்கொண்டதா காவல்துறை……?

Mon Aug 7 , 2023
தமிழகத்தில் சட்டவிரோதமாக கலாச்சாராயம் காய்ச்சப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அந்த குற்றத்தையும் கடந்து, தற்போது இன்னொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனாலும், இதனை மாநில அரசும், காவல் துறையும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. போதை பொருளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று, மாநில அரசும், காவல் துறையும் தெரிவித்து வந்தாலும், தற்போது கஞ்சா விற்பனை என்பது நகரங்களை தாண்டி கிராமப்புறங்களிலும் வந்துவிட்டது. […]

You May Like