fbpx

பட்டாசுக் கடை வைக்க உரிமம்…! இ-சேவை மையங்கள் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்…! தேவையான ஆவணங்கள்…?

12.11.2023-ஆம் தேதி அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் படி பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில் 12.11.2023-ஆம் தேதி அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் படி பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதார்/பான் கார்டு/வாக்காளர் அடையாள அட்டை, Etc., பட்டா அல்லது சொத்து பத்திரம், வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்கறிஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக் கட்டணமாக ரூ.500/- அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய இரசீது மற்றும் கட்டட வரைபடம்-2 பிரதிகள் மற்றும் உரிய இதர ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியாக 31.10.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 31.10.2023 ஆம் தேதிக்கு பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பத்தின் படி தற்காலிக பட்டாசு கடை அமைக்கப்படவுள்ள கட்டடம், கல் கட்டடம் அல்லது தார்சுக் கட்டடமாக இருத்தல் வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைத்திருக்க வேண்டும். மின்சார விளக்குகள் மட்டும் கடையில் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையிடமிருந்து உரிமம் வேண்டப்படும் கட்டடத்திற்கு தடையின்மைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும். கடை வைக்க விண்ணப்பிக்கும் போது இந்நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வீட்டுக்கடன் வாங்கிய நபர்களே கவனம்...! வங்கி சார்பில் இனி ரூ.5,000 நிவாரணம்...! ரிசர்வ் வங்கி அதிரடி...

Tue Oct 17 , 2023
வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி அதனை முழுவதுமாக அடைத்த பிறகும் ஆவணங்களை வங்கிகள் ஒப்படைக்காவிட்டால் வங்கி சார்பில் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும். வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் தருவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை […]

You May Like