fbpx

Pension… வரும் டிச: 31-ம் தேதி வரை கால அவகாசம்…! உடனே இதை சமர்ப்பிக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்….!

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.

எப்படி அனுப்புவது…?

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் மின்னணு முறையில் பதிவு செய்யலாம். இதற்காக www.jeevanpraman.gov.in என்ற இணையதளத்தில் “Locate a centre” என்பதை கிளிக் செய்து உங்கள் பகுதியின் பின்கோடு பதிவு செய்யவேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற மையங்களில் தங்களின் ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் போன்ற தேவையான ஆவணங்களுடன் சென்று மின்னணு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

அல்லது ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான www.chennaiport.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் புகைப்படத்தின் மீது தாங்கள் ஓய்வூதியத்தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் உண்மை சான்றிதழாக கையெழுத்து பெறவேண்டும். மேலும் வங்கி மேலாளரின் பெயர், பதவியின் பெயர், மற்றும் அலுவலக முத்திரை, பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றை படிவத்துடன் சேர்த்து கூரியர் சேவை அல்லது விரைவு தபால் (Speed Post) வாயிலாக சென்னைத் துறைமுகப் ஆணையத்திற்கு 31.12.2022 க்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க வைத்த சீனியர் மாணவர்கள்.! 5 பேர் அதிரடியாக கைது...!

Sun Nov 20 , 2022
ராகிங் என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களை பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க வைத்த சம்பவம் ஒடிசா கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்ததை அடுத்து வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பினாயக் அகாடமி கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. 5 மாணவர்களை கைது செய்துள்ளதாக பெர்ஹாம்பூர் எஸ்பி சர்பன் விவேக் எம் […]

You May Like