fbpx

தமிழகத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

English Summary

Light to moderate rain with thunder and lightning is likely to occur in Tamil Nadu today.

Vignesh

Next Post

சற்றுமுன்...! தீயாக பரவும் நிபா வைரஸ் பாதிப்பு..‌ பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு..!

Thu Sep 19 , 2024
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மாநில சுகாதார துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 49 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 104 பேருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஞ்சேரி […]

You May Like