தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப். எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மது பானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், மேற்காணும் நாட்களில் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.