fbpx

மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணி வரை மது கடைகள் இயங்க அனுமதி…! முதல்வர் உத்தரவு…

உணவகங்கள் தங்கள் வணிகத்தை நள்ளிரவு 1 மணி வரை நடத்த தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் உணவகங்கள் மற்றும் மற்ற வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் அறிவித்துள்ளார். இருப்பினும் இரவு 11 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். ஜூலை 24 மற்றும் 25 தேதிகளில் ஹைதராபாத், சைபராபாத் மற்றும் ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் உணவகங்கள் தங்கள் வணிகத்தை நள்ளிரவு 1 மணி வரை நடத்த அனுமதிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

இரவு 11 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே நிற்கக் கூட அனுமதிக்காதது மற்றும் இரவு 11 மணிக்கு உணவகங்களை மூடுவது, இதனால் மக்களுக்கு, குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு இரவில் உணவு வசதி இல்லாமல் போவது குறித்து விசாரிக்க வேண்டும் என்று AIMIM தலைவர் அக்பருதீன் ஓவைசியின் கோரிக்கைக்கு அவர் பதிலளித்தார். மது அருந்துவதை ஊக்குவிப்பதை எதிர்ப்பதாகவும், விதிகளின்படி மதுக்கடைகள் மூடப்படும் என்றும் முதல்வர் தெளிவுபடுத்தினார். “சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும், ஏனெனில் எங்கள் அரசாங்கத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

English Summary

Liquor shops are allowed to operate till 11 pm across the state

Vignesh

Next Post

வன்னியர் சமூகநீதி படுகொலையில் ஊடகங்களை திமுக கூட்டாளிகளாக்கக் கூடாது...!

Sun Aug 4 , 2024
The media should not be made allies of the DMK in the vanniyar social justice massacre.

You May Like