fbpx

உலகில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரங்களின் பட்டியல்!… இந்திய நகரங்கள் என்னென்ன தெரியுமா?

2023 ஆம் ஆண்டின் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் உலக நகரங்களின் புதிய பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பட்டியல், டிசம்பர் 31, 2022 இல் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நகரங்களை வரிசைப்படுத்தியது. இதில் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீனா, லண்டனைத் தவிர, முதல் 10 இடங்களில் எந்த ஒரு ஐரோப்பிய நகரமும் இடம்பெறவில்லை. ஆசிய பசிபிக் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பெங்களூரு சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. “கார்டன் சிட்டி” மற்றும் “இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்றும் அழைக்கப்படும் பெங்களூரு தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வருகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல், உலகெங்கிலும் உள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய 9 பிராந்தியங்களில் உள்ள 97 நகரங்களை உள்ளடக்கியது. இதில் 2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தைப் பிடித்தது. இங்கு 3,40,000 கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்று ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கை கூறுகிறது. நியூயார்க் நகரத்தைத் தொடர்ந்து 2,90,300 கோடீஸ்வரர்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 2-வது இடத்தையும், 2,85,000 கோடீஸ்வரர்களுடன் சான் பிரான்சிஸ்கோ 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

லண்டன் 2.58,000 கோடீஸ்வரர்களுடன் 4வது இடத்திற்குக் தள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2,40,100 கோடீஸ்வரர்களுடன் சிங்கப்பூர் 5-வது இடத்தில் உள்ளது. 2000-ஆம் ஆண்டில், உலகின் லண்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இந்த பட்டியலில் பின்தங்கியுள்ளது. சிட்னி 1,26,900கோடீஸ்வரர்களுடன் 10வது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 59,400 கோடீஸ்வரர்களுடன் மும்பை 21 வது இடத்தையும், 30,200 கோடீஸ்வரர்களுடன் டெல்லி 36 வது இடத்தையும், 12,100 கோடீஸ்வரர்களுடன் கொல்கத்தா 63 வது இடத்தையும், 11,100 கோடீஸ்வரர்களுடன் ஹைதராபாத் 65 வது இடத்தையும் பிடித்துள்ளன.

Kokila

Next Post

திருச்சி ஜம்புகேஸ்வர் கோயிலில் வேலை!... மாதம் ரூ.58,600 வரை சம்பளம்!... தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்!

Thu Apr 20 , 2023
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர்பெருக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி […]
மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணிடுங்க..!!

You May Like