fbpx

வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல்!… 10 கி.மி கடக்க 29 நிமிடங்கள்!… 2வது இடத்தில் பெங்களூரு!

உலகளவில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் லண்டனும், பெங்களூரு 2வது இடத்திலும் உள்ளது.

உலக அளவில் வாகன நெரிசல் உள்ள நகரங்கள் குறித்து டாம் டாம் என்ற ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆவதையடுத்து பெங்களூரு மத்திய பகுதி 2வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆவதால், லண்டன் முதலிடத்தை பிடித்திருந்தது. அடுத்த இடத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த தூப்ளின் நகரம் உள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக தூப்ளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பதிவுகளின்படி, பயணிகள் சராசரியாக 28 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் நகரத்தில் 10 கிமீ பயணம் செய்ய செலவிடுகிறார்கள்.

நீண்ட காலமாக மெதுவான போக்குவரத்தை கையாண்டு வரும், ஜப்பானின் சப்போரோ நகரத்தில் 10 கி.மீ தூரம் பயணிக்க பயணிகளுக்கு சராசரியாக 27 நிமிடங்கள் 40 வினாடிகள் தேவைப்படுகிறது. ஜப்பானில் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் புளொட் ரயில்களை விட்டாலும், சாலை போக்குவரத்தை வேகப்படுத்த முடியாத சூழல் உள்ளது. மிலன் நகரத்தில் சராசரியாக 27 நிமிடம் 30 வினாடிகளில் 10 கி.மீ தூரம் கடக்க ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு இந்திய நகரம் புனே. இங்கே, பயணிகள் தங்கள் பொதுவான போக்குவரத்துநேரத்தில் கிட்டத்தட்ட இருமடங்கு நேரத்தை செலவழிக்கிறார்கள்.

மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டும், தென் அமெரிக்காவின் பெரு நாட்டை சேர்ந்த லிமாவும், மணிலா நகரம் “தென்கிழக்கு ஆசியாவில் மிக மோசமான போக்குவரத்தை” கொண்டுள்ளது என்றும் பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில், கொலம்பியாவின் பொகோடா மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய இரண்டு நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன, சராசரி நபர் ஒவ்வொரு ஆண்டும் முறையே 191 மற்றும் 190 மணிநேரம் போக்குவரத்தில் இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் சுற்றுலாப்பயணிகளால் ஆண்டு முழுவதும் நிரம்பி வலிக்கிறது. இங்கு பயணிப்பவர்களும் பல மணிநேரம் போக்குவரத்தில் செலவிடுகின்றனர். ஒரு வருடத்தில் 82 மணிநேரம் போக்குவரத்தில் இழக்கப்படுகிறது.சிலி நாட்டில் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான சாண்டியாகோ, இயற்கை எழில் கொஞ்சும் இங்கு போக்குவரத்தும் மக்களை கொஞ்சி அப்படியே உக்காரவைத்துவிடுகிறது. இங்கு பயணிகள் ஒரு வருடத்தில் சராசரியாக 89 மணிநேரத்தை போக்குவரத்தில் செலவிடுகிடுகிறார்கள்.

Kokila

Next Post

50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!... தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு... முழுவிவரம் இதோ!

Sun Mar 5 , 2023
ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்கவிழாவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]

You May Like