சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த மல்லிகா என்ற பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்ததில் அவர் பெண்ணுறுப்பில் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து மல்லிகாவின் 2-வது மகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தாயார் மல்லிகா தனியாக வசித்து வந்ததாகவும், மகன் வேறு வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. வழக்கம் போல் தாயை காண வீட்டிற்கு சென்ற போது அவர் இறந்து கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மல்லிகாவின் முதல் கணவர் முருகன் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதை தொடர்ந்து இரண்டாவதாக முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவருக்கும், மல்லிகாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்கள் பிறந்துள்ளனர். 4 பேரும் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், 2-வது கணவர் முருகனும் மல்லிகாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து மகன்கள் தனி வீட்டிலும், மல்லிகா தனி வீட்டிலும் வசித்து வந்துள்ளார். மல்லிகா கட்டிட வேலைக்கு சென்ற போது மேஸ்திரியாக பணிபுரிந்த ஜெயக்குமாருடன் கடந்த 5 ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மல்லிகாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், இருவரும் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் நண்பரும், ஓட்டுநருமான பாண்டியன் என்பவரை மல்லிகாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஜெயக்குமார். அவரும் மல்லிகாவை அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. வழக்கம் போல் நேற்றைய முன்தினம் இரவு மல்லிகா வீட்டிற்கு சென்ற ஜெயகுமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மல்லிகா பாண்டியனுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த ஜெயக்குமார், பாண்டியனை திட்டி வெளியேற்றியுள்ளார். பின்னர் இது குறித்து மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஜெயக்குமார் மதுபாட்டிலால் மல்லிகாவின் பெண்ணுறுப்பில் அடித்துள்ளார். தொடர்ந்து மல்லிகாவை சரமாரியாக அடித்துக் கொலை செய்து, மல்லிகாவின் பெண்ணுறுப்பில் தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து எதுவும் தெரியாதது போல், அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.