fbpx

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள  பத்து தல திரைப்படம் வரும் 2023 மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான முப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தள்ள நிலையில் நிலையில் தற்போது பத்து தல திரைப்படம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Kokila

Next Post

நடிகை அமலா மீது கடும் கோபத்தில் இருக்கும் பொதுமக்கள் ஏன் தெரியுமா?

Sat Dec 31 , 2022
தெலங்கானாவில் தெரு நாய்கடியால் பாதிக்கப்படும் மக்கள் தற்போது நடிகை அமலா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் வெறிநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருநாய்களால் தாக்கப்பட்ட வீடியோக்களை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. இருசக்கர […]

You May Like