கள்ளச்சாராயத்தில் கலந்திருந்த மெத்தனாலே பலரின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மெத்தனால் என்றால் என்ன..? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களில் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
மெத்தில் எஸ்டர்கள் மற்றும் மெத்திலமைன்கள் உற்பத்தியிலும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மெத்தனால் உட்கொள்ளும்போது வாந்தி, வயிற்றுப் போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், மரணத்திற்கு வழிவகுக்கும் போலி மது தயாரிப்பதற்கு மெத்தனால் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தீங்குவிளைவிக்கும் மெத்தனாலை தயாரித்து அனுமதியின்றி விற்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.